பொங்கலுக்கு பின் தமிழகத்தில் நடக்க போகும் அரசியல் மாற்றம்! அடுத்தடுத்து தமிழகம் வரும் பாஜக தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


வருகிற  நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மற்ற கட்சிகள், இதுவரை தங்களது நிலைப்பாடுகள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்நிலையில்,  தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 18ஆம் தேதி கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவக்க தமிழகம் வருகிறார். இவரை தொடர்ந்து, வரும் 21-ம் தேதி அமித்ஷாவும், 24-ம் தேதி பிரதமர் மோடியும் தமிழகம் வருகை தர உள்ளனர்.

இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து முழுவிவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Presidenet Come Tamilnadu After Pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->