பாஜக வளர காங்கிரஸ் தான் காரணம்.! பிரதமர் யார் என்று யார் தீர்மானம் செய்யவேண்டும்?.!! திடீரென உடைக்கப்பட்ட மர்ம முடிச்சு.!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் சார்பில் சிறுபான்மையினர் மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவரும்., முன்னாள் பிரதமருமான தேவகவுடா அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். 

இந்தியாவின் பிரதமராக 10 மாதங்கள் பணிபுரிந்த எனது அதிஷ்டத்தின் காரணமாக பிரதமராக பதவியேற்றேன்., எனது ஆட்சி காலத்தில் எந்தவிதமான பணிகளும் நடைபெறுவில்லை என்று குற்றம் சுமத்தி வருகின்றனர். எனது பதவி காலத்திற்கு முன்னதாக முஸ்லீம்கள் இராணுவத்தில் சேர இயலாத நிலை இருந்து வந்த நிலையில்., அதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்டேன். 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜனதாதளம் (எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியில்., தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் காங்கிரஸ் தலைவர் சந்தித்து பேசும் போது., தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்., அதிகளவில் வெற்றி பெட்ரா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கவும்., இது குமாரசாமி அரசு என்றும் கூறினார்கள்.

அதன்படி முதல்வராக பதவியேற்ற குமாரசாமியை பாரதிய ஜனதா கட்சியினருக்கு பிடிக்கவில்லை என்பதால்., கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர். எங்களது கட்சியில் உள்ள யாரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்று எனக்கு தெரியும்., அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். 

முதலமைச்சர் குமாரசாமி சிறுபான்மையினருக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை என்று தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்., இதனை எண்ணி யாரும் கவலையுற வேண்டாம். கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம். இதனை இன்னும் எத்தனை முறையென்றாலும் நான் தெரிவிப்பேன். 

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் யார் என்பதை மக்களே தீர்மானம் செய்வார்கள்., பிரதமராக யார் வந்தாலும் நாட்டிற்கும்., நாட்டு மக்களுக்கும் அயராது உழைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.. என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp growth by congress party in karnadaga


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->