குஜராத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாஜக வேட்பாளர்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பம்னு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து காங்கிரஸ் கட்சி சூரத் நாடாளுமன்ற தொகுதியில் மாற்று வேட்பாளரை அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, அடுத்து காங்கிரஸ் கட்சி போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் சூரஸ் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் முகிலேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. ஏனெனில், பாஜக ஆட்சிமேல் மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை கண்டு பயந்து உள்ளது பாஜக என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bip candidate not match to win


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->