முதலமைச்சர் மீது செருப்பு வீச்சு.! திடீர் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் பாட்னாவில் இருக்கும் பாபு சபாகர் மைதானத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்ர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென முதலமைச்சர் நிதிஷ்குமாரை நோக்கி செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக செருப்பு அவர்மீது படாமல் கூட்டத்தில் விழுந்தது.

இந்த தாக்குதலை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் சந்தன் என்பதும், பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

English Summary

bihar chief ministerSeithipunal