காவலாளியான மோடிக்கு ஆதரவாக பிக்பாஸ் நடிகை செய்த செயல்! நன்றி கூறி மோடி வெளியிட்ட பதிவு.! - Seithipunal
Seithipunal


 

 

நாடுமுழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேசிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்  நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்று ’நானும் தேசத்தின் காவலன்’ என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மேலும் அதனை தொடர்ந்து  ட்விட்டர் பக்கத்தில் ‘Chowkidar Narendra Modi’ எனப் பெயர் மாற்றமும்  செய்யப்பட்டது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர்கள்,  உறுப்பினர்கள் என பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தின் முன் சவுக்கிடர் என சேர்த்து, பெயரை மாற்றி கொண்டனர்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன் 'காவலாளி காயத்ரி ரகுராம்'  Chowkidar Gayathri Raguram என பெயர் மாற்றம் செய்துகொண்டார்.

அதற்கு பிரதமர் மோடி  ”இருவரும் இணைந்து வலுவான மற்றும் பாதுகாப்பான புதிய இந்தியாவை உருவாக்குவோம். உங்களுடைய ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி ” என காயத்ரி ரகுராமிற்கு தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.



 

இதற்கு காயத்ரி, வாவ்! மிக்க நன்றி மோடிஜி. இது என்னுடையக் கடமை. நான் உங்களை எப்போதும் பின் தொடர்வேன். உங்கள் பதிலால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சிறந்தவர். நான் என் நாட்டை காதலிக்கிறேன்“ என பதில் ட்விட்டர் செய்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss gayathri support chowkidar modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->