பரபரப்பான சூழலுக்கிடையே பொறுப்பை ஏற்றுகொண்ட அமைச்சர் அருண் ஜெட்லி!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. அவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் எய்ம்ஸில் சிகிச்சையில் இருந்தார். இடையில் மீண்டுவந்த அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டார். 

இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்று விட்டதால் அவருடைய பணியானது தேக்கமடைந்தது. அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு இருந்ததால், அவர் திரும்ப முடியாத காரணத்தினால் அவருடைய நிதியமைச்சர் பதவியை தற்பொழுது ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக அளித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். 

சிகிச்சை முடிந்து திரும்பும் வரை இலாகா இல்லாத அமைச்சராக அருண் ஜெட்லி இருப்பார் எனவும் குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினத்துடன் பட்ஜெட் கூட்ட தொடர் முடிவுற்ற நிலையில் அந்த கூட்ட தொடர் முழுவதுமாக நிதியமைச்சராக பியுஷ் கோயல் செயல்பட்டார்.

சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய அமைச்சர் அருண் ஜெட்லி மீண்டும் நிதியமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்டார். புல்வாமா தீவிரவாத தற்கொலை படை தாக்குதல் தொடர்பாக இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arun jaitley again take charge as finance minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->