ரஜினிக்கு அரியணை.! ஸ்டாலின், எடப்பாடிக்கு ஆப்பு.! கௌசல்யாவுக்கு கட்டப்பஞ்சாயத்து.!! கொந்தளிக்கும் அர்ஜுன் சம்பத்.!!! - Seithipunal
Seithipunal


வரும் 28 ஆம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தலாமா, நடத்த வேண்டாமா என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில், அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் காட்சிகள் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இதில், அதிமுகவை தவிர மற்ற காட்சிகள் த்தனைகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க நினைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் எந்த கூட்டணியாக இருந்தாலும், அதனை வருகின்ற திருவாரூர் இடைத்தேர்தலில், தோற்கடிப்பதே இந்து மக்கள் கட்சியின் இலக்காக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கடலூரில் பேட்டியளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயில் அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், ஆஞ்சநேயரின்  வீதி உலாவை தொடங்கி வாய்த்த பின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷியங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிலளித்தார். அதில், 

ரஜினி அரசியல்:-

ஆன்மீக அரசியலை முன்னெடுத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அரியணையில் ஏற  இந்து மக்கள் கட்சி அனைத்து தேர்தலிலும் தீவிரமாக உழைக்கும். 

கௌசல்யா சக்தி-கட்டப்பஞ்சாயத்து:-

பெரியார் சிலை முன்பு, திராவிட பாணியில் நடைபெற்ற கௌசல்யா -சக்தி திருமணத்தில், சக்தி ஒழுக்கம் கெட்டவர் என்று ஒரு பெண் புகார் அளித்தார். இந்த புகாரை கெளசல்யாவும், சக்தியும் ஒப்பு கொண்டனர். அதன்பின், இந்த விவகாரத்தில், தியாகு மற்றும் கொளத்தூர் மணி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்வது குற்றம் என்று தெரிந்தும் இத்தனை கண்டுகொள்ளாமல் அரசு இருக்க கூடாது. உடனடி நடவடிக்கை தேவை.

சபரிமலை விவகாரம்:-

ஐயப்பன் கோவில் புனிதத்தையும்,  கேரளாவில் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்க செய்யும் மனிதி என்ற கம்யூனிஸ்ட் அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பில் உள்ளவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். என்று அர்ஜுன் சம்பத் அந்த பெட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARJUN SAMBATH PRESS MEET


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->