பாஜகவை வீழ்த்துவதே எங்களின் நோக்கம்.!! ராஜாவின் மனைவி சூளுரை‌!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலிலுக்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைந்திருந்தாலும் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றன. 

தற்போது வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி இருந்துவரும் நிலையில் எதிர் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் வயநாடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி‌.ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா களமிறங்குகிறார். இன்று தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் ‌"எங்களின் நோக்கம் பாஜகவை வீழ்த்துவதே. கேரளாவில் எப்பொழுதும் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் தான் போட்டி.

சித்தாந்த ரீதியாக மட்டும் தான் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி. காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுமா? அல்லது இடதுசாரி வேட்பாளர் வேண்டுமா? என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து கொண்டு சமூக நீதியை முன்னெடுத்து செல்லக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annie Raja Said our aim was defects BJP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->