தமிழக மீனவர்கள் 18 பேர் கைது.. மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை அவசர கடிதம்.!! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளிவருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் "தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உறுதி செய்வதில் உங்கள் உறுதியான நிலைப்பாட்டை தமிழக பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும் இந்த மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு கைதான 18 தமிழக வீரர்களை விரைவாக தாயகம் திரும்பவும் அவர்கள் மீன்பிடி படங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai lettered to Central minister for tamilnadu fishers arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->