எட்டுவழி சாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அன்புமணி அதிரடி! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க சென்றார்.  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் அவருக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில்  கருத்து கேட்க அனுமதி வழங்கவில்லை. 

ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி நிர்வாகமும் இல்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களின் ஒரே பிரிதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான கண்டிக்க கூடிய செயல் என்று அன்புமணி கூறியிருந்தார். 

இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்கும், நாடாளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன் என்றும்  அன்புமணி கூறியிருந்தார்.  அன்புமணி கூறியபடி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தது அப்போது பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அவரது சொந்த தொகுதிக்குள் செல்லவிடாமல் தடுக்கும் மாநில அரசின் முடிவு அதிகார துஷ்பிரயோகம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியது. 

மேலும் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு அனுமதி வழங்க  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

அனுமதி கிடைத்த காரணத்தினால் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க சென்று மக்களை சந்தித்தார்.   மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் குறித்து அடுத்து என்ன நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தருமபுரி நாடாளுமன்ற அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் சென்னை சேலம் எட்டு வழி சாலைக்கான சுற்றுசூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையே இன்னும் மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திற்கு வரவில்லை என்று கூறி அதிரவைத்துள்ளார். 

மேலும் இந்த திட்டத்தின் இயக்குனர் இன்னும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் சுற்று சூழல் பாதிப்பு குறித்து எவ்விதமான தகவலையும் பெறாமலே இந்த திட்டத்திற்காக மத்திய மாநில அரசு நிலங்களை கையகப்படுத்த அளவீட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani speaks about chennai salem highway in parliment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->