மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவோம்.! அன்புமணி இராமதாஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்நிலையில்., பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மக்களவை தொகுதியின் வேட்பாளர் மரு.அன்புமணி இராமதாஸ் தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மக்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று தனது வாக்குகளை குடும்பத்துடன் பதிவு செய்தார். தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் தெரிவித்தார். 

அதில்., மாபெரும் வெற்றிக்கூட்டணியை அமைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளளோம். தேர்தலின் முடிவில் அனைத்து தொகுதிகளுக்கும் வெற்றி கண்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani ramadoss speech after voting about peoples need development


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->