அமமுக - ம.க - வி.த.பு.க கூட்டணி உடன்பாடு... ஒப்பந்தம் கையெழுத்து.! - Seithipunal
Seithipunal


அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் மக்களரசு கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், மக்களரசு கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களரசு கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மக்களரசு கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் ஒரு (1) சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன்படி, திருத்துறைப்பூண்டி தனித்தொகுதி மக்களரசு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் மக்களரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் (எ) அருள்மொழிவர்மன் அவர்கள் கையெழுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் ஒரு (1) சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன்படி, திருவிடைமருதூர் தனித்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் கையெழுத்தியுள்ளார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Party Alliance with Makkalarasu Party and Viduthalai Puligal Party 10 March 2021


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->