அம்மாடி.! டிவிட்டரில் ட்ரண்ட் ஆகும் தினகரன்.!! ஆசியாவிலேயே ரொம்ப உயரமா.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின், அதிமுக இரண்டு மூன்றாக உடைந்து. அதில், தற்போது முதலமைச்சராக இருக்க ஈபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், தினகரன்-சசிகலா தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது.

இதனையடுத்து, கட்சியை காப்பாற்றவும், சின்னத்தை கைப்பற்றவும் எடப்பாடி பழனிசாமி அவர்களும், ஓ பன்னீர்செல்வம் அவர்களும் ஒன்றாக இணைந்து கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றியுள்ளனர். அதிமுகவையும் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே சசிகலா மற்றும் தினகரன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.  இந்த கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா அவர்களும், துணைப் பொதுச் செயலாளராக தினகரன் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 முதல் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.

தினகரன் தலைமையில் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தினகரன் அழைத்துள்ளார்.

இந்நிலையில் விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆசியாவிலேயே மிக உயரமான அக்கட்சியின் கொடிக்கம்பத்தை நிறுவப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமான புகைப்படங்கள், பதிவுகள் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் #AMMK flag flies high என்ற ஹாஸ்டேக் மூலம் அவரது தொண்டர்கள் ட்ரண்ட் ஆக்கி வருகின்றனர்.

மேலும், இந்த கொடிக்கம்பத்தில் இன்று மாலை 4 மணி அளவில் துணை பொதுச்செயலாளர் தினகரன் கொடி ஏற்ற உள்ளதாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK flag flies high TWITTER TREND


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->