கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் ட்விஸ்ட்! பின்வாங்கிய முக்கிய தலைவர்!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி கிளைமேக்ஸ் ஆனது இன்று என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாருடன் கூட்டணி? எந்த கட்சி எந்த அணியில் உள்ளிட்ட பல கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் பதில் கிடைத்துவிடும் என தெரிகிறது. 

திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் 4 நாட்களாக இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக இடையே நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிய, இன்று  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  டெல்லியிலிருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் வருகிறார்கள் என்ற தகவலும் வெளியானது. 

அதிமுக தலைவர்கள் சந்தித்து பாஜக அதிமுக கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நான்கு முக்கிய கட்சிகளும் எதிர்பார்க்கும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை எந்த அணி இழுக்கும் என்று கடுமையான போட்டி நிலவுகிறது. தங்கள் முடிவை இதுவரை அறிவிக்காத பாட்டாளி மக்கள் கட்சியும் இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

அதிமுக பாஜக பாமக கூட்டணி அமையுமா? திமுக காங்கிரஸ் பாமக கூட்டணி அமையுமா? என்பது தான் தற்போதைய தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று கிளைமேக்ஸ் இல்லை என்பது போல தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய பாஜக தலைவர் அமித் ஷா வரவில்லை என்றும் வருகை ரத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் வருகையை உறுதி செய்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amitsha tn program cancelled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->