கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஒருபோதும் மக்கள் மறக்க கூடாது!! அவர்களின் ஊழலை புட்டு.. புட்டு வைத்த அமித்ஷா!! - Seithipunal
Seithipunal


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் மக்களவை தேர்தலுக்காக அணைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனை  ஆதரித்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சங்கரப்பேரியில் உரையாற்றினார்.

இந்தநிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் 2 அணி அளவில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். தூத்துக்குடி வந்த அவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமான தொண்டர்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேசத்தொடங்கிய அமித்ஷா, புல்வாமா தாக்குதல் வீரர்கள் நினைவாகவும், அபிநந்தன் நினைவாகவும் கூட்டத்தை தொடங்குகிறேன். தமிழ் கடவுளான முருகனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன் என தனது உரையை தொடங்கினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு  இருக்கிறது. எனவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழகத்தில் எம் ஜி ஆர், ஜெயலலிதா அவர்களின் வழியில் அடுத்த முறை  மோடியின் ஆட்சியும் ஏழைகளுக்கான ஆட்சியாக இருக்கும் என நான் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு தற்போது அமைந்துள்ள பெரிய கூட்டணி அமையவில்லை. ஆனாலும் தமிழகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அமைந்துள்ள பலமான கூட்டணியால் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறலாம். தமிழக மக்கள் எங்களை புறக்கணித்தாலும் தமிழக மக்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதனால் தான் தமிழகத்தில் 2 மந்திரியை கொடுத்தோம். ஒருவர் நிர்மலா சீதாராமன், மற்றொருவர் பொன் ராதாகிருஷ்ணன் என கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தென் மாநிலங்களை புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அது தவறானது. தென் மாநிலங்களுக்கு 4 மேல்-சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் ஊழல்வாதிகள். இவர்களின் மீது ஊழல் வழக்கு இருப்பு உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. அவர்கள் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளனர். எனவே மக்கள் அதற்கு பாடம் புகட்டுவார்கள்.

தூத்துக்குடியில் பேசிய அமித்ஷா, பின்னர்  புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் கூடி கடும் விவரவேற்பு கொடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithsha talk about Tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->