நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்ய போகிறார்கள்..? பக்கவாத்தியங்கள் எல்லாம் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன..! இனி யாரும் தடுக்க முடியாது.. - Seithipunal
Seithipunal


டாட்டாவும்,அம்பானியும் 10 வருடங்கள் முன்பு சென்டரல் வங்கியில் 45 ஆயிரம் கோடி கடன் பெற்றனர்.

எதற்காகக் கடன் பெற்றார்கள்?

அனல்மின் நிலையம் தொடங்குவதற்கு. எதற்காக? மின் உற்பத்தி செய்வதற்காக...ஆனால் கடந்த பத்து வருடங்களாக தொடங்கவில்லை.

பத்துவருடமாக தொடங்காதவர் இப்போது தொடங்குகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.

ஆனால் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரு டன் ரூபாய் 2500 க்கு தர வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள்.

ஒரு டன் நிலக்கரி 25ஆயிரம் விலை இருக்கும்போது எப்படி 2500 க்கு கொடுப்பது என கோல் இந்திய சேர்மன் மறுத்துவிடுகிறார்.

உடனே பிரதமர் தலையிடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் டாட்டா அம்பானி , கோல்இந்திய சேர்மன் பேச்சுவார்த்தை நடந்தது.

உலகப் பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி முடிவெடுத்தார். அதாவது இந்திய மக்கள் வரிப்பணத்தில் இயங்கும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம்

ஒரு டன் நிலக்கிரியை 25ஆயிரத்திற்கு ஆஸ்திரேலியா, இந்தோனிசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வாங்கி ரூபாய் 2500 க்கு டாட்டாவுக்கும், அம்பானிக்கும் கொடுப்பதாக.

மக்கள் வரிப்பணத்தை யாரிடமிருந்து பிடுங்கி யாரிடம் கொடுக்கிறார் என்பதை இந்த நாட்டின் கோவணங்கட்டிய விவசாயிகளும், நடுத்தர வர்க்க மக்களும் தெரிந்து கொண்டீர்களா?

இத்தோடு கதை முடியவில்லை. இனிதான் இருக்கிறது உச்சகட்டம்.

அது என்னான்னு கேக்குறீங்களா? பொறுங்க... சொல்றேன்...

கோல் இந்தியா நிறுவனம் டாட்டாவுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வாங்குகிறதில்லையா?

அந்த ஆஸ்திரேலியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்டிராக்ட் பணியை அம்பானியும்,டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.

அதாகப்பட்டது, டாட்டா,அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே ஒரு டன் ரூபாய் 25ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு இந்தியாவில் நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500க்கு கொடுக்கிறார்கள்.

நாம் கட்டும் ஜிஎஸ்டி எங்கு செல்கிறது என்பது இப்போது புரிகிறதா?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambani's coal plan and modi's helping mind


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->