நாடாளுமன்றத்தில் வெளுத்துப்போன அரசியல் கட்சிகளின் சாயம்! எதிர்ப்பு எல்லாம் சும்மா தான்!  - Seithipunal
Seithipunal


பொருளாதார அளவில் ஏழ்மையாக உள்ள பொதுப்பிரிவினருக்கு அதாவது முன்னேற்றம் அடைந்த சாதியினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை நேற்று முன்தினம் மத்திய அரசு கொண்டு வந்தது. 

இந்த கூட்டத்தொடரில் இல்லாத இந்த திடீர் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலமான எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில்  மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் இன்று தாக்கல் செய்ய, விவாதத்திற்கு வந்தது. இங்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அந்த எதிர்ப்பு எல்லாம் வாக்கெடுப்பில் பிரதிபலிக்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கட்சிகளும் இந்த மசோதாவை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் நேரடியாக எதிர்க்காமல் மறைமுக ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வாக்கெடுப்பு கணக்கின் படி தெரிகிறது. 

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மசோதாவை மக்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் 3 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இருந்த 326 பேரில் 323 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதேபோல மாநிலங்களவை வாக்கெடுப்பில் 149 பேர் ஆதரித்தும், 7 பேர் எதிர்த்தும் வாக்களித்தார்கள். மசோதா தாக்கல் செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் மசோதாவை நிறைவேற்றி மோடி அரசு அசத்தியுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பெரிதாக எந்த கட்சியும் எதிர்க்கவில்லை என்பதும மோடி அரசின் மற்றொரு சாதனையாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All parties are hide support in parliament to oc reservation bill


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->