அஜித்குமாரின் ரசிகர்கள் 2000 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர் - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் தமிழிசை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமாக பணியாற்றி வரும் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில்., தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்., தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமானது திருச்சியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக திருச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

அந்த பேட்டியில்., நடிகர் அஜித் ரசிகர்கள் என்று அறிமுகம் செய்துகொண்ட சுமார் 2000 இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்., அவர்களுக்கு எந்த அறிவுரையாக., நல்ல நடிகரின் ரசிகர்களாகிய நீங்கள்., இனியிருந்து நல்ல தலைவரின் வழியில் செயல்படுங்கள் என்று அறிவுரை வழங்கினேன் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்ட நான்கு பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி., நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்., தமிழிசை சுமார் 2000 அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்., அவர்களுக்கு அறிவுரை வழங்கினேன் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajithkumar fans 2000 members joined in bjp party once again talks thamilisai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->