அதிமுகவில் திடீர் குழப்பம்! எதிர்த்து நிற்கும் தம்பிதுரை! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


சில தினங்களுக்கு முன் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா விவாதம் நடைபெற்ற போது அதிமுக சார்பில் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, பாரதிய ஜனதா அரசினை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இது அதிமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் சார்பில் இஸ்லாமிய உறுப்பினர் என்ற முறையில் அன்வர் ராஜா பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விவாதத்தின் போது அவர் என்ன பேச வேண்டும் என்பதனை அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்கு அவருடைய எண்ணங்களை பிரதிபலித்துள்ளார். இதனை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்த  நிலையில் திருவள்ளூர் எம்பி வேணுகோபாலை அழைத்து நாடாளுமன்றத்தில் எம்பி அன்வர்ராஜா பேசியது அவரது சொந்த கருத்து என்று கூறும்படி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் முத்தலாக் மசோதாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தான் எதிரொலிப்பதாக அன்வர் ராஜா  பதில் அளித்துள்ளார். முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றத்தின் போதே  நாடாளுமன்றத்தில் அதிமுகவில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற இரண்டு அணிகள் உருவாகிவிட்டது.

ஏற்கனவே மக்களவை சபாநாயகர் தம்பிதுரை பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பேட்டிகளில் பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பாஜக, அதிமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அதிமுக பிளவுபடும் அபாயம் உள்ளது. அதனால் தேர்தல் நெருங்கும் நேரம் வரை பா ஜ கூட்டணி அறிவிப்பைத் தள்ளிப்போட இபிஎஸ், ஓபிஎஸ் தலைமை விரும்பியது. 

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்குமாறு அதிமுகவை தொடர்ந்து நாட்டின் முக்கிய பொறுப்பும் வகிக்கும் ஒருவர்  வலியுறுத்தி வருவதாக கூறபடுகிறது. இந்தக் கூட்டணிக்கு வேறு வழியின்றி தமிழக அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. 

ஆனால் இந்த முடிவுக்கு அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு ஆட்சி, பதவி எல்லாம் இன்னும் மூன்று மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு அரசியல் எதிர்காலம். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் அவர்களுடன் கூட்டணி வைத்தால் வெற்றி கேள்விக்குறி என்று நினைக்கிறார்கள். அதனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

ஆனால் அதே சமயம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்து வரும் தமிழக அரசை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில் இன்னும் இரண்டரை வருடங்கள் ஆட்சி அதிகாரம் உள்ளது. இதனால் அதிமுக தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் குழப்பத்தில் உள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக மக்களவை சபாநாயகர் தம்பிதுரை முத்தாலக் மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என மீண்டும் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk MP oppose bjp alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->