தேர்தல் முடிந்த பின்னே தன் சுயரூபத்தை காட்டிய மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முனத்தினம் வெளியானது. இந்த தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. மிசோரத்தில் மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து சிவசேனா கட்சியின் உறுப்பினர் காவாலி படில் கேள்வி எழுப்பினார். அதற்கு உடனே பதிலளித்து பேசிய அமைச்சர் ருபாலா, மத்திய அரசு இதுவரை விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும், திட்டமும் வெளியிடவில்லை.

இத்தகைய கடன் தள்ளுபடி சலுகையில் மத்திய அரசு ஈடுபட்டால் மாநிலத்தின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக அமையும். பல விவசாயிகள் கடன் தொகையை செலுத்த வருபவர்கள் கூட மனம் மாறி சென்று விடுவார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களும் பாஜக ஆட்சியில் இருந்த மாநிலங்கள் குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்தது இந்த வெற்றிக்கு முக்கிய கருதுகோலாக  பார்க்கப்படுகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After the election, the federal government announced the farmers!


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->