தனிக்கட்சி தொடங்க எனக்கு தகுதி இல்லையா? தம்பிதுரை பரபரப்பு பேட்டி!! அதிமுகவில் மீண்டும் புதிய குழப்பம் ! தனி கட்சி தொடங்குகிறாரா தம்பிதுரை! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் அதிமுகவில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற இரண்டு அணிகள் உருவாகிவிட்டது. கடந்த சில வாரங்களாகவே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பேட்டிகளில் பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். 

இதனால் அதிமுகவில் புதிய குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் பாஜகவை எதிர்த்து கருத்து கூட சொல்ல விரும்புவதில்லை. தமிழக முதல்வர் உள்பட ஆளும் கட்சியினர் பலரும் பாஜகவுக்கு ஆதரவு தான் தந்து வருகிறார்கள். 

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மட்டும் அதிமுகவை எதிர்த்து வருகிறார். மத்திய அரசு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், மக்களவையில் அதை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனிடையே, 10 எம்பி எம்எல்ஏக்களுடன் தம்பிதுரை அதிமுகவில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்க இருக்கிறார் என சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவியது. இந்நிலையில் இதற்கு தம்பிதுரை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி தவறானது தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை  என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP Thambidurai Talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->