எங்கள் எம்.பி.க்களா இவர்கள்! பெருமைப்படும் அளவிற்கு செயல்பட்ட சிதம்பரம், கடலூர் எம்பிக்கள்! - Seithipunal
Seithipunal


நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாதிக்கப்படும் மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், என்.எல்.சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமைச்சர் எம்சி சம்பத்  நல்ல முடிவாக கிடைக்கும் என மக்களுக்கு எதிராக கூறியிருந்தார். இதனை எதிர்த்து இன்று அமைச்சர் சம்பத் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தினை மக்கள் நடத்தினார்கள். 

நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் நிலங்களைக் கொடுத்ததால் அமைக்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம் இப்போது அதன் நோக்கங்களை மறந்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  இணையாக மக்களைச் சுரண்டுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஏற்கனவே சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என 3 நிலக்கரி சுரங்கங்களை என்.எல்.சி அமைத்துள்ளது. இந்நிலையில்  சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது  சுரங்கம் அமைக்க முடிவு செய்து அதற்காக பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தவுள்ள நிலங்களின் பரப்பு 12,125 ஏக்கர் ஆகும். இந்த நிலங்கள் தான் அப்பகுதிகளில் உள்ள 26 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. 

சுரங்கம் 3 நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நெய்வேலி பகுதியில் உள்ள 26 கிராம மக்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலையில் உள்ளார்கள். இந்த திட்டத்தினை  என்.எல்.சி நிறுவனமும் அரசும் உடனே கைவிட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு ஆதரவாக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி என போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட 40 கிராமங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கம் செய்யக் கூடாது எனவும், அந்த பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், அதிமுக எம்பிக்கள் கடலூர் தொகுதி அருண்மொழித்தேவன், சிதம்பரம் தொகுதி சந்திரகாசி ஆகியோர் கடிதம் வழங்கினர். 

வெற்றி பெற்ற நான்கரை வருடங்களில் மக்களுக்கு விருப்பமாக எதையுமே செய்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்காத நிலையில், இந்த செயலானது மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருப்பதால் எங்க எம்பிக்களா இவர்கள் என மக்கள் ஆச்சர்யபடும் வகையில் செயல்பட்டுளள்னர். மக்கள் விருப்பம் நிறைவேறுமா? என்எல்சி நிர்வாகம் நினைப்பது நிறைவேறுமா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp given letter to piyush goel to stop extend mine 3 in nlc


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->