அதிமுகவிலிருந்து தினகரன் பக்கம் தாவும் எம்.எல்.ஏ? : வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


டி.டி.வி.தினகரனுக்கு ஏற்கனவே எம்எல்ஏக்கள் 18 பேர் ஆதரவாக உள்ள நிலையில், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா மணிவண்ணன் டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.கவில் குழப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து டி.டி.வி.தினகரனை ஓரங்கட்டிய பிறகு, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி போன்ற எம்எல்ஏக்கள் 18 பேர் டி.டி.வி.தினகரன் பக்கம் வந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததன் காரணமாக, அவர்கள் 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். 

இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அ.தி.மு.கவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வீழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து மேலும் பல எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் டி.டி.வி.தினகரன் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகின்றனர்.

வரும் 8ம் தேதி சட்டசபை கூடவுள்ள நிலையில், அ.தி.மு.க எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், நாளை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா மணிவண்ணன் டி.டி.வி.தினகரனை அவருடைய இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ஆட்சியாளர்கள் மத்தியில் மேலும் கலக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla shifted dinakaran team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->