எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான், அதிர்ச்சியில் பா.ஜ.க! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் தற்போது நெருங்கி வருகிறது, அதிமுகவுடன்  பா.ஜ.க கூட்டணி  வைக்க உள்ளதாக  தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த  கூட்டணியில்  அதிமுக, பா.ஜ.க தவிர்த்து தேமுதிக, கொங்கு மண்டல தேசியக்கட்சி, புதிய  தமிழகம், புதிய நீதிகட்சி, இந்திய ஜனநாயக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற கழகம் ஆகிய கட்சிகள் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.   

இந்நிலையில், சில தொகுதிகளை, பா.ஜ,க வுக்கு தருவதற்கு அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்பும் புதுமுகங்களுக்கு எல்லாம், பா.ஜ.க தொகுதிகளை கேட்பதால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை, அந்த கட்சிக்கு விட்டுத்தர வேண்டிய நெருக்கடியில்  அ.தி.மு.க உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றாலும், அதன் பலன் அனைத்துமே, தேர்தலுக்கு பின், பா.ஜ.கவுக்குத் தான் கிடைக்க போகிறது. இதனால், சிட்டிங் எம்.பி.க்கள் பலர் தங்களது தொகுதிகளை விட்டுக்கொடுக்கும்  சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை பா.ஜ.க மேலிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது அதில்,தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, பேச்சுவார்த்தையை இழு இழுவென இழுத்து, கடைசி நேரத்தில் எதுவும் செய்ய இயலவில்லை எனக்கூறி தப்பிக்கும் திட்டமும், அ.தி.மு.க.விடம் உள்ளது என தெரிவித்துள்ளது.   

பிரதமர் மோடி தமிழக சுற்றுப்பயணத்தின்போதே கூட்டணியை தெளிவுப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை, பா.ஜ.க.க்கு அ.தி.மு.க. அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK master plan in BJP is shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->