நீண்ட இழுபறிக்கு பின்னர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல்! ஓபிஎஸ் இபிஎஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


திமுக, அதிமுக கூட்டணி பேச்சுகள் முடிவுற்றது. தொகுதி பங்கீடு செய்து கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியாகிவிட்டது. வேட்பாளர்களின் பட்டியலை கூட சிறு சிறு கட்சிகள் வெளியிட்டுவிட்டன. அதிக தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக அறிவித்து உள்ளன. 

அதிமுக கூட்டணியில், அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, தமாகா 1, என் ஆர் காங்கிரஸ் 1, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில், திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, ஐஜேகே 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை ராகு காலம் முடிந்த பிறகு, திமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபட்டுள்ளது.

தென் சென்னை - ஜெயவர்த்தன்
திருவள்ளூர் - வேணுகோபால்
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சேலம் - சரவணன்
நாமக்கல் - காளியப்பன்
ஈரோடு - மணிமாறன்
திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன், 
நீலகிரி - தியாகராஜன் 
பொள்ளாச்சி - மகேந்திரன்
கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
கரூர் - தம்பிதுரை
பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி
சிதம்பரம் - சந்திரசேகர் 
நாகை - சரவணன் 
மயிலாடுதுறை - ஆசை மணி 
மதுரை -  ராஜசத்யன்
தேனி - ரவீந்திரநாத்,
நெல்லை - மனோஜ் பாண்டியன்
ஆரணி -  செஞ்சி ஏழுமலை 

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கபட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK LOK SABHA ELECTION CANDIDATES


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->