அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரு தினங்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி இறுதியாகி உள்ளது.

பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு 5 தொகுதிகள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், ஐ.ஜே.கே. புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கி அதிமுக சின்னத்தில் நிற்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்,தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk coalition for dmdk 5 volumes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->