பாஜகவை வழிக்கு கொண்டு வந்த அதிமுக! சாதித்து காட்டிய எடப்பாடி பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி? என்ற அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. தங்கள் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி இன்று அறிவித்துள்ளது. இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பாமக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வேகத்தில் அதிமுக பாமக கூட்டணி உறுதியானது. தற்போது எத்தனை சீட் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளது. 

இந்த கூட்டணியில் பாமகவிற்கு 7 இடங்கள் எனவும்,ஒரு ராஜ்ய சபா எனவும் உறுதியளித்துள்ளார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அடுத்து நடைபெற உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என கூறப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

அதிமுக பாஜக பாமக கூட்டணி அமையுமா? என்பது தற்போது அந்த கூட்டணி தான் என்பது உறுதியானது. அதனை உறுதி செய்ய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் வருகை தந்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதில் பாஜகவிற்கு 8 தொகுதிகள் மொத்தமாகவும், உள் இட ஒதுக்கீடாக 3 தொகுதிகளை புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்க உள்ளது. 

10 தொகுதிகள் வரை கேட்ட பாஜகவிற்கு 5 தொகுதிகள் என்று பேசி அதிமுக சமாளித்துள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய அனைத்து கட்சிகளையுமே திருப்தி செய்யும் அளவில் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக. மேலும் பாஜகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாஜகவிற்கு அதிமுக வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk bjp coalition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->