பாஜக-அதிமுக கூட்டணி உறுதி.! இந்த வாரமே தமிழகம் வரும் தலைவர்கள்.!!  - Seithipunal
Seithipunal


17-வது மக்களவை தேர்தல் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சியான காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் ஆளும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

இதற்கிடையே, வரும் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார். அப்போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று பாஜக அரசியல் வட்டாரங்கள் பேசி கொள்கின்றன.

அதிமுக-பாஜக கூட்டணி அமையலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வந்தாலும், அதிமுகவின் அமைச்சர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என்றே தெரிவிக்கின்றனர். போதாதா குறைக்கு அதிமுகவின் தம்பிதுரை அவர்கள் ஆளும் பாஜகவின் மத்திய அரசை தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி, அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாகவும், இதனை உறுதி செய்ய இந்த வாரமே பாஜக தேசிய தலைவர் மற்றும் அமித் ஷா, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK BJP ALLIANCE NEW INFORMATION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->