அதிமுக-திமுக அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று அதிமுக போட்டியிட உள்ள 20 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூட்டணி கட்சியான பாமக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் திமுகவும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மக்களவை தேர்தலோடு நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர் பட்டியலை அதிமுக மற்றும் திமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று காலை அமமுகவும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 

இன்று அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தஞ்சை தொகுதிக்கான வேட்பாளர் நடராஜன் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து திமுகவும் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK AND DMK Manifesto TOMORROW RELEASE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->