அதிமுக கூட்டணியில் தேமுதிக, ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல்? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகிறது. 

இந்த கூட்டணியில் பா.ஜ.க., தே.மு.தி.க, கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கூட்டணி உறுதி என்றும் கூறப்படுகிறது.             

தொகுதி  பங்கீட்டில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும், பா.ஜ.க. 08 தொகுதிகளிலும், தே.மு.தி.க 04 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சிகளுக்கு மற்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடவே வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.  

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே அ.தி.மு.க சார்பிலும், பா.ஜ.க. சார்பிலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK and DMDK volumes list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->