அனைத்தும் ரத்து.!! அதிமுக எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளுக்கு பரந்த திடீர் உத்தரவு.!!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம்- திண்டிவனம் சாலையில்  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்றிக்கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சிகிச்சைக்காக  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த விபத்தில், ஓட்டுநர் அருமைச்செல்வம் மற்றும் ஒருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின், அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், எம்.பி ராஜேந்திரன் உயிரிழந்ததை அடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடக்கவிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எம்.பி ராஜேந்திரன் மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் சோகத்தில் மூழ்கினர். 62 வயதான ராஜேந்திரன் அவர்கள் விழுப்புரம்  நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk all program cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->