அண்ணனுக்கு ஓட்டு போடுங்கள்... வீடியோ வெளியிட்டு வாக்கு கேட்கும் விஷால்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் கட்டமாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்த முடிந்த நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர் கூறியவை, இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலை சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுக்கு நிறைய தைரியம் வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

இந்த சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் சரியான வேட்பாளராக என் அண்ணன் பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை ஆதரவாக குரல் கொடுத்து, கெட்ட விஷயங்களை சுட்டிக்காட்டியும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 

இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற எல்லா தகுதிகளும் இருக்கிறது. மத்திய பெங்களூர் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜ் சார் நான் உங்களுக்கு விசில் அடிக்கிறேன். மக்கள் உங்களுக்கு நிச்சயம் விசில் அடிப்பார்கள். நீங்கள் நினைத்த படியே இந்த தேர்தலில் வெற்றி பெற்று உங்கள் தொகுதி மக்கள் நல்ல செய்வீர்கள் என நம்புகிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் விஷால் கூறியுள்ளார். இதன் மூலம் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் விஷால்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->