கையை நீட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய தமிழக  அமைச்சர்….! விழாவில் கலந்து கொள்ளாமல், கோபித்துக் கொண்டு, காரில் பறந்தார்….! - Seithipunal
Seithipunal


 

வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில், மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த விழாவினை ஒட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, அதிமுகவினர் பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணி காட்பாடி ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக காமராஜர் பாலம் நோக்கி சென்றது. புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது, வணிக வரி மற்றும், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தன் காரில் வந்தார்.

அப்போது, அந்த சாலையின் மற்றொரு புறத்தில், குதிரை வண்டி, மேளம், சிலம்பாட்டங்களுடன், அமமுக-வினர் தனிப் பேரணியாக, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்று கொண்டிருந்தனர்.

அதிமுக, மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும், தங்களது கூட்டத்தினருடன் பேரணியாகச் சென்றதால், சாலையில் நெருக்கமாக இருந்தது. அதனால், அமைச்சர் தன் காரில், எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் செல்ல இயலாமல் தவித்தார்.

பின், ஆத்திரத்துடன் இறங்கிய அமைச்சர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுண் இன்ஸ்பெக்டர் இருதயராஜிடம், “நாங்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். நீங்கள் எங்களுக்குத் தான் அனுமதி  அளித்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஏன் அனுமதி அளித்தீர்கள்? என்று கையை நீட்டி கோபத்துடன் மிரட்டலாகப் பேசினார்.

பின், கோபத்துடன் காரில் ஏறிய அமைச்சர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்காமல்,  காட்பாடி வழியாகத் திரும்பிச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a minister angry with the police inspector


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->