ஜாக்டோ ஜியோவிற்கு ஆதரவாக களமிறங்கிய அதிகாரிகள்.! இன்று தமிழகத்தில் அரசு முடக்கம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த 6 நாட்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500 வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை. மேலும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நாளை தேர்வு பணிக்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களின்  பணி ஆணையில், இன்று காலை முதல் காலை 9 மணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்க வேண்டும் எனவும், அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் என்றும் அந்த பணி நியமன ஆணையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் போராட்டத்தில் ஆதரவாக இன்று காலை முதல் இறங்கியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு இன்று முடக்கம் காணவும் வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a govt employees support jacto goe strike in tamilnadu contains shutdown


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->