2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக சாத்தியமில்லை! மோடி கூறியது நடக்காது.. முன்னாள் பிரதமர்!! - Seithipunal
Seithipunal


2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிபாக்கப்படும் என்பது சாத்தியமில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, குலாம் நபி ஆசாத், பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க அனைத்து நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி கூறும் கருத்துக்களை கட்டு வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிபாகும் என பிரதமர் மோடி கூறியது சாத்தியமில்லை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

வேளாண் வளர்ச்சி 14% என்பதும் சாத்தியமில்லை என்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள் எழுச்சியுடன் போராட வேண்டும் என்றும் சுர்ஜிவாலா தெரிவித்தார். மேலும், மாநில கட்சிகளுடனான கூட்டணி அமைப்பது, கட்சியின் சவால்கள், தேசத்துக்கான மாற்றுப் பாதையை முன்னிறுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 farmers income is not doubly possible in manmohan singh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->