ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூ.2000 வழங்குவதில் புதிய சிக்கல்! மக்களுக்கு ரூ.2000 பணம் கிடைக்குமா? - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில், ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அறிவிப்பட்டது என்று கூறினார்.

மேலும், நேற்று முதலமைச்சர் பழனிசாமி சட்ட சபையில் கூறியவை, இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும் என்றார். மேலும் 60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று கூறினார்.

இந்நிலையில், 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் வழக்கு தொடந்துள்ளனர். 

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 money in new case high court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->