#BREAKING சற்றுமுன் 18 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார் முக ஸ்டாலின்.!! போனஸ் ஒன்று.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தல் அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திருபுரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் இந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதில், 

பூந்தமல்லி - கிருஷ்ணசாமி 
திருப்போரூர் - செந்தில்வர்மன் 
ஆம்பூர் - விஸ்வநாதன் 
அரூர் - கிருஷ்ணகுமார் 
ஆண்டிப்பட்டி - மகாராஜன் 
பரமக்குடி - சம்பத்குமார் 
திருவாரூர் - பூண்டி கலைவாணன் 
பெரம்பூர் - ஆர்.டி.சேகர் 
குடியாத்தம் - காத்தவராயன் 
சாத்தூர் - சீனிவாசன் 
பாப்பிரெட்டிப்பட்டி - மணி 
நிலக்கோட்டை- சவுந்திரபாண்டியன் 
தஞ்சாவூர் - நீலமேகம் 
சோளிங்கர் - அசோகன் 
விளாத்திகுளம் - ஜெயக்குமார் 
பெரியகுளம் - சரவணக்குமார் 
மானாமதுரை - இலக்கியதாசன் 
ஓசூர் - எஸ் ஏ சத்யா

மேலும், புயதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளரை முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தட்டாஞ்சாவடி - வெங்கடேசன் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 ASSEMBLY BY ELECTION DMK CANDIDATE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->