திமுக ஏழைகளுக்கு எதிரான கட்சி! பரபரப்பை ஏற்படுத்திய தமிழக எம்.பி! - Seithipunal
Seithipunal


பல ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.  
 
அதன் அடிப்படையில், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து, இது தொடர்பான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இதையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மதோதவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த வழக்கு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியவை, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்தது, திமுக ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பதை காட்டுகிறது. மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பயன்பெற்றது தமிழகம் தான் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 pc reservation in Pon Radhakrishnan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->