உங்களின் மனைவி உங்களேயே சுத்தி சுத்தி வரவேண்டுமா?.! இதனை மட்டும் செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருக்கிறது என்பது சர்வ சாதாரணமாகியுள்ளது. எனது வீட்டிற்கு எப்போது சென்றாலும் எனது மனைவி என்னிடம் சண்டையிடுகிறாள் என்று பெரும்பாலான ஆண்கள் கூறுவார்கள். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு சில தந்திரங்களை உபயோகம் செய்ய வேண்டும். 

பணியை முடித்துவிட்டு இல்லத்திற்கு திரும்பும் சமயத்தில் மனைவிக்கு தெரியாமல் அல்லது அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிவிட்டு செல்வது அல்லது வாங்கிவிட்டு வரவா? என்று அன்பாக பேச வேண்டும். 

உங்கள் மனைவியின் பிறந்த நாள்., குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் உங்களின் திருமண நாட்களை நியாபகம் வைத்து., அந்த நாட்கள் வரும் வேளையில் பரிசு பொருளை தயார் செய்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். 

உங்களின் மனைவி புதிய வகையிலான ஆடையை அணிந்திருந்தால்., எந்த விதமான தயக்கமும் இன்றி இந்த ஆடையில் பார்க்கையில் மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறுங்கள்., அவரின் முகத்தில் கிடைக்கும் புன்னகையோ... புன்னகை....  

எந்த நேரத்திலும் மனைவியிடம் முகத்தை காட்டும் போதெல்லாம் உர்.. என்று வைத்துக்கொள்ளாமல் சாதரணமாக வைத்து., அவ்வப்போது சிரித்து மகிழுங்கள். வாரத்தின் ஆறு நாட்களிலும் உங்களுக்காக சமைத்து வழங்கும் நிலையில்., வாரத்தின் இறுதி நாளன்று உங்களுக்கு நன்றாக சமைக்க தெரிந்த உணவை சமைத்து வழங்குங்கள். 

குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் மனைவியிடம் குழந்தைகள் அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறது என்றால்., குழந்தைகளிடம் சென்று நீங்கள் பேச்சு கொடுத்து உங்களின் மனைவிக்கு சிறிது ஓய்வெடுக்க சமயம் வழங்குங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Your wife should love you do this activities


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->