மனைவியின் அன்பை பெற இதோ நூதன டிப்ஸ்!! வாட்ஸாப்பில் வெளிவரும் நகைச்சுவை டிப்ஸ்!!  - Seithipunal
Seithipunal


மனைவியின் அன்புக்குரியவர்களாக சில எளிய வழிமுறைகள்:

1.மாமியார்(மனைவியின் தாயார்) விரதம் இருக்கும் பொழுது " உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க "என்று மிகவும் அக்கறையாக இருப்பது போல் கோபபட வேண்டும்.

2. தொலைக்காட்சியில் நகைகடை விளம்பரம் ஒளிபரப்பாகும் பொழுது " அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் "என்று பொய்யாய் கட்டவிழ்த்து விடவேண்டும். 

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் என அழைக்கும் போது , " இல்லடா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட வெளில போலாம்னு இருக்கன் என்னால வர முடியாது"என்று மனைவியின் காதில் விழுமாறு சத்தமாக கூறவேண்டும். 

4. "உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும், மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" அப்படி என்று குழந்தை போல சோகமா முகத்தை வைத்து கொண்டு பேசவேண்டும். குறிப்பு: "மச்சினிச்சியை பார்க்கவா" என மனைவி துழாவ கூடும் ஜாக்கிரதை. 

5. அடிக்கடி "எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்த?" என்று ஈவு இரக்கம் இல்லமால் பொய் சொல்ல வேண்டும். 

6.மனைவி முன்பு மட்டும்  மச்சினியிடம் அவர்களது படிப்பு, எதிர்கால குறிக்கோள் பற்றி விசாரிக்க வேண்டும். 

7. செல்போன் திரையில் மனைவியின் புகைப்படத்தை வைத்துக்கொள்ள வேண்டும். 

8 . அதிகாலைல எழுந்து அவர்கள் முகத்தை பார்க்கும் பொழுது மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். அலறி அடித்து கத்தினால் மொத்தமாக முடிந்துவிடும். 

9.அவர்கள்  சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும் , மறந்தும் கூட முகத்த சுளிக்க கூடாது.

10 .கோவமாக பூரி கட்டையால் அடிக்கும் பொழுது முதல் அடியிலேயே சுருண்டு விழுந்து துடிக்க வேண்டும். உங்களது வலிமையை காட்ட நினைத்தால் பின்னர் முகம் பளபளப்பாக ஆகிவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whatsapp viral jokes like tips


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->