இளநரைக்கு விரைவில் வருகிறது மாற்றுத் தீர்வு!.விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!. - Seithipunal
Seithipunal


 

தற்போதுள்ள இளம் வயதினர் முதல் முதியோர் வரை இளநரையை விரும்புவதில்லை.
இன்றைய காலத்தில் இளம்வயதிலேயே தலைமுடி அதிக பேருக்கு நரைக்க ஆரம்பித்துவிட்டது.

எனினும் இவ்வாறான நரையை போக்குவதற்கு முழுமையான  மருத்துவ தீர்வு எதுவும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

மாற்றாக செயற்கையான டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

                               

இவற்றினால் நிரந்தரமான தீர்வு கிடைக்காததுடன், பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
டைகள் பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகி துயரப்பட்டோர் அதிகமுண்டு.

இதனைக் கருத்தில்கொண்டு கிரபீனைப் பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர்.

வைரத்தின் ஒரு பகுதியாக பூமியில் இருந்து எடுக்கப்படும் கிரபீன் ஆனது கறுப்பு நிறத்தினை உடையது.

இதனைப் பயன்படுத்தி தலை முடியின் புறப் பகுதிக்கு ஓவர்லேப் செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நோர்த்வெஸ்டேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இம் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
 
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தொடர்ந்து மக்கள் இந்த கண்டுபிடிப்பை வரவேற்று பாராட்டுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

treatment for Gray hair


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->