குழந்தைகளுக்கு ஜங்க் புட் தவிர்க்க., இந்த பழத்தை வாங்கி கொடுத்து அவர்களின் பலத்தை கூட்டுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


ஆப்பிள் பழத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான "வைட்டமின் சி" இருப்பதாலும்., உடலுக்குத் தேவையான 14 விழுக்காடு அளவிற்கான வைட்டமின்களை கொண்டிருப்பதாலும் தினமும் ஆப்பிள் பழத்தை சாப்பிடுவது நல்லது. 

ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் எனப்படும் கொழுப்புகளை கரைக்கக்கூடிய நார்சத்தின் காரணமாக உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் அனைத்தும் கரைக்கப்பட்டு உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது.

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தின் மூலமாக மூளைச் செல்களானது அழியாமல் பாதுகாத்து., நமது நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கின்றது.

ஆப்பிள் பழத்தின் சாற்றில் இருந்து எடுக்கப்படும் வினிகரை., மேலை நாடுகளில் அத்தியாவசிய பொருட்களாக இல்லங்களில் வைத்து உபயோகம் செய்கின்றனர். 

ஆப்பிள் பழத்தை அதிகமாக சாப்பிடும் போது., ஆப்பிள் பழத்தின் உள்ள சத்தின் காரணாமாக கண்புரை நோய் ஏற்படுவதை தவிர்த்தும்., ஏற்பட்டவர்கள் குறைக்கவும் இயலும். 

மேலும் தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் காரணமாக ஞாபக சக்தி அதிகமாவதோடு மட்டுமல்லாமல்., மூளையில் ஏற்படும் நோய் தாக்கத்தின் அளவை குறைத்து, நோய்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக்கப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to give this fruits for your child to against junk foods


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->