உங்களுக்கு, இது முதல் ஜென்மமா!! அடுத்த ஜென்மம் இருக்கிறதா? முன் ஜென்மம் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!! - Seithipunal
Seithipunal


உங்களுக்கு முன்ஜென்மம் என்று ஒன்று இருந்திருந்தால் நீங்கள் நிச்சயம் அப்பாவியாக இருக்க முடியாது. மற்றவர்கள் ஏமாற்றும் வித்தையையும் நீங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். உங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருவர் பேசினால் அவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் ஏற்கனவே, இங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் எல்லாவற்றிலும் சரியாக இருக்க முயற்சிப்பீர்கள். உங்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது அந்த பிரச்சினையால் அவர்களுக்கு என்ன நடக்க போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே உணர முடியும். எனவே அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவீர்கள்.

நீங்கள் யாரையாவது சந்தித்தால், விரைவில் அவர்களை பற்றிய விபரங்களை உங்கள் ஆன்மா எளிதில் அறிந்துகொள்ளும். அதன்காரணம் அப்படிப்பட்டவர்களை நீங்கள் உங்கள் முன்ஜென்ம வாழ்க்கையில் ஏற்கனவே பார்த்ததுதான். மன உணர்ச்சிகள் மட்டும்  உடல் உணர்ச்சிகளையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவையும், ஆற்றலையும் அதிகரிக்கும் உள்ளுணர்வு நமக்கு தானாக வந்துவிடுவதில்லை. சில நேரங்களில் இந்த அறிவாற்றல் உங்களின் கடந்த கால வாழ்க்கையிலிருந்தும் வந்திருக்கலாம். நமது வயது சிறியதாக இருப்பினும் நமது ஆன்மாவின் அனுபவம் அதிகமாகயிருப்பதால் உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கனவுகள் அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். ஒரே கனவு உங்களுக்கு திரும்பத்திரும்ப வருகிறதா? கனவுகளில் வரும் சூழ்நிலையும், மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்துகிறதா? அப்படியானால் அந்த கனவு உங்களுடைய கடந்த பிறவியின் நினைவலைகளை மீண்டும் கொண்டுவருகிறது என்றும் அர்த்தம்.

பெரியவர்களை விட குழந்தைகளிடம் ஆன்மாவை கடக்கும் புள்ளி அருகில் இருக்கும். அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து நினைவுகளை எளிதில் பெற முடியும். சிறுவயதில் நம்மால் விவரிக்க முடியாத பல நியாபகங்கள் நமக்கு தோன்றும், பின்னாளில் மட்டுமே நம்மால் அதனை விவரிக்க இயலும்.

தற்பொழுது நடக்கும் ஒரு விஷயம் ஏற்கனவே நம் வாழ்க்கையில் நடந்தது போன்ற உணர்விருக்கும். இந்த உணர்வு கிட்டதட்ட நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் இருந்திருக்கும்.  பெரும்பாலும் தேஜாவூ தானாக வரும். ஆனால் சிலசமயம் இது வாசனை, பொருள், இடம் போன்றவற்றால் தூண்டப்படும். இது நரம்பியல் கோளாறுகளென்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது மற்ற பரிமாணங்களில் இருந்து ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இது உங்கள் முன்ஜென்மத்தின் அறிகுறியாக இருக்க நிறைய வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் பூமிக்கு புதிய ஆன்மாவாக இருந்தால் உங்கள் செயல்கள் குழந்தைத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவம் வாய்ந்த ஆன்மாவாக இருக்கும் பட்சத்தில் செயல்களில் முதிர்ச்சி இருக்கும். இது உங்களுக்கு முன்ஜென்மம் இருந்ததை உறுதிசெய்யும்.

நீங்கள், எதாவது ஒரு காலகட்டத்தை பற்றியோ அல்லது கலாச்சாரத்தை பற்றியோ அதிக ஆர்வத்துடன் கற்றிருக்கிறீர்களா?. அப்படியிருந்தால் உங்கள் ஆன்மா அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலோ, இடத்திலோ அல்லது அந்த கலாச்சாரத்திலோ வாழ்ந்திருக்கலாம்.

உங்களுக்கு இது முதல் ஜென்மமாய் இருந்தால், 'எப்படி மற்றவர்களுடன் விளையாடுவது, தனக்கான வாழ்க்கையை எப்படி வசதியாக அமைத்துக்கொள்வது' என்று யோசிப்பீர்கள். ஆனால், ஏற்கனவே பலமுறை இங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் தெரிந்து விளையாட்டை திரும்பவும் விளையாட ஆர்வம் காட்டமாட்டீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to find our past life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->