இளம்வயதிலேயே பெண்கள் பருவமடைய முக்கிய காரணமும்! ஏற்படும் பிரச்சனையும்!. - Seithipunal
Seithipunal


பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பார்த்து பெற்றோர்கள் பயப்படும் நிலை நிலவிவருகிறது. இப்பொழுது 10-12 வயதிலேயே பருவம் அடைந்து விடுகிறாள். இதற்கு அடிப்படைக் காரணம் புதியதான நமது வாழ்க்கை முறைதான் என கூறப்படுகிறது .

சத்தான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது.இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது.  எடை அதிகரிக்கிறது. அதீத எடை ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பருவமடையும் வயது இளம் வயதிலேயே வருவதற்கு இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக உள்ளது.முந்தைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். 

தொலைக்காட்சி மற்றும் கணினி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது. அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள்.

இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். இதைத் தவிர குழந்தைகள் பிறந்த குழந்தையாய் இருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாவுகளையும் போசாக்கு மாவுகளையும் உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சோயாவில் உள்ள Phytoestrogen பெண்களின் ஹார்மோனான ஈஸ்ரஜின்னை சார்ந்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். என்றும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Therapists claim that children are puberty at the young age.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->