நாக்கு ருசியா கேக்குதே என்று வாயில் வைத்தால், இரத்த நாளமே வெடித்து விடும்: இதையெல்லாம் ருசித்து சாப்பிடுபவர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை.? - Seithipunal
Seithipunal


வீட்டிலேயே சில்லி பொரித்தாலும், கடையில் வாங்குவதை போல நல்லா முறுவலா வேணும்" என்று எதிர்பார்ப்பவர்கள் உண்டு, இப்போதைக்கு மக்கள் மத்தியில் கிரில்டு மற்றும் வறுக்கும் இறைச்சி, சிக்கன் மற்றும் மீன் வகைகளுக்கு நல்ல ஓட்டம் இருக்கிறது.A

சில இடங்களில் சற்று கருகி போயும், அரை குறையாக வெந்து ஒருவித வித்தியாசமான சுவையில் இருப்பதால் அவற்றை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவற்றை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 86 ஆயிரம் பெண்களிடமும், 17,104 ஆண்களிடமும் நீண்ட கால ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், பலருக்கு ஆய்வு தொடங்கும் முன்பு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை.

ஆய்வு முடிந்த பின்னர் சோதித்து பார்க்கையில், பங்கேற்றவர்களில் கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சி வகைகள், சிக்கன் மற்றும் மீன் சாப்பிட்டவர்களில் 37,123 பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் பாதித்து இருந்தது.

இறைச்சி, சிக்கன் மற்றும் மீன்களை அதிக அளவு வெப்பத்தில் சமைக்கும் போது அவற்றில் உள்ள இன்சுலின் அளவு அழற்றி, வி‌ஷத்தன்மை போன்றவை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு இருதய நோய்கள் உருவாகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Study-Grilled-Roasted-meat-may-up-High-Blood-Pressure-risk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->