இந்த பிரச்சினை உள்ளவங்க தயவுசெஞ்சு பப்பாளியை தொட்டுகூட பார்க்காதீங்க! அப்பறம் ஆபத்துதான் .! - Seithipunal
Seithipunal


மக்களுக்கு மிகவும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கக்கூடியது பப்பாளி பழம். இந்த பழம் மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் இத்தகைய பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகள் நன்கு பழுக்காமல் சிறிது பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பச்சை பப்பாளியின் பாலில் லாடெக்ஸ் எனும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளதால் இது கருச்சிதைவை உண்டாக்கும்.

ஆண்கள் பப்பாளியை அதிகளவில் சாப்பிட்டால் அவர்களுக்கு இனப்பெருக்கத் தாக்கம் ஏற்படுத்தும். விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தை பெருமளவில் பாதிக்கும்.எனவே ஆண்கள் அதிகளவு பப்பாளியை சாப்பிடாமல் தடுப்பது நல்லது.

பப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.எனவே வயிற்றில் ஏதேனும் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி அதிகளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பப்பாளியில் உள்ள பெப்பெய்ன் என்சைம் அதிகளவு நம் உடலுக்கு சென்றால், அது தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.

பப்பாளி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடியது. எனவே குறைவான ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், மிகவும் ஆபத்தாகும்.

 பப்பாளியில் விட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை குறைத்து, சிறுநீரக கற்களை உருவாக்கும்.

தினமும் அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின் நம் உடலில் அதிகம் சேர்வதால், வெளிரிய மஞ்சள் நிறம் நம் உள்ளங்கையில் ஏற்படும். அது கரோட்டினீமியா எனும் சரும நோயாகும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papaya dis advantages for the people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->