இன்னும் அந்த பூச்சி மருந்தை கட்டிக்கொண்டே தான் அழ வேண்டுமா..? விவசாயிகள் வயிற்றில் பாலை வார்க்கும் சில வழிமுறைகள்..! - Seithipunal
Seithipunal


பயிர்களில் ஏற்படும் நோய்களை இயற்கையாக கட்டுப்படுத்தும் முறை இருந்தும் இன்னும் பூச்சி மருந்தை நோக்கி ஓட செய்தே நம்மை அடிமையாக்கி விட்டனர்.

அவற்றில் சில எளிமையான அடிப்படை செய்முறைகள்:

உளுந்து, தட்டைபயறு, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் சாம்பல் நோய் தாக்கும் அவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 10 கிலோ யூக்கலிப்டஸ் இலையில் சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மறுபடியும் அடுத்த வாரம் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் யூக்கலிப்டஸ் இலைச்சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த அடி உழவு போடும் போது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும்.

75 கிலோ வேப்பம் புண்ணாக்கு அடி உழவில் போட்டு வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

வாடல் நோய் கருகல் நோய், இலைப் புள்ளி நோய் போன்ற நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு சூடோமோனஸ் 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும்

அல்லது சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் என்ற அளவில் கலந்து செடிக்கு அருகில் ஊற்றி விடலாம் அல்லது தெளிக்கலாம்.

சாறுறிஞ்சும் பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.

இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.

தகவல்: rsga seed


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

natural methods to control insects


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->