தனித்தனியா வேண்டாம் ஊறுகாய்?! ஒட்டுமொத்த சத்தும், சுவையும் ஒன்றாக வெஜிடபிள் ஊறுகாய்!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

கேரட், பீன்ஸ் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2 
பூண்டு - 5 பல்
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி - விரல் நீளத்துண்டு

 

 

செய்முறை:

இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு வேக வைத்த காய்கறிகளை ஈரம் போக உலர விடவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கவும்.

 

அதனுடன் வேக வைத்து உலர வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

பின்பு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

அதன் பின் பச்சை வாசனை போனதும், கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare vegetables pickle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->