வீட்ல எதுமே இல்லை ஆனா, ஸ்பெஷலா சாப்பிடணுன்னு தோணுதா? இதை ட்ரை பண்ணுங்க!!  - Seithipunal
Seithipunal


வீட்டில் எப்பொழுதும் இருக்கும் ஒரு காய்கறி என்றால் அது முட்டைகோஸும், உருளைக்கிழங்கும் தான் . இதை மட்டும் பயன்படுத்தி சுவையான பிரியாணி எப்படி செய்வதென பார்க்கலாம். 

முட்டைகோஸின் நன்மை பற்றி பலருக்கு தெரிவதே இல்லை. முட்டைகோஸ் நல்ல ஞாபக சக்தியை தரவல்லது. அதில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பை தரவல்லது. தற்பொழுது முட்டைக்கோஸ் பிரியாணி எப்படி செய்வதென பாப்போம். 

தேவையான பொருட்கள்: 

பாசுமதி அரிசி - 250 கிராம்
முட்டைகோஸ் - 250 கிராம்
வெங்காயம் -  நறுக்கியது ஒன்று,
தயிர் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
இஞ்சி-சிறிதளவு,
பூண்டு- பாதி  
பட்டை, கிராம்பு- தேவையான அளவு, 
ஏலக்காய்- 5  
தேங்காய்ப் பால் - அரை கப்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை : 

முதலில், அரிசியை ஊறவைத்து கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். 

பின்னர், இஞ்சி, பூண்டு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் கொஞ்சம் சிறிதளவு நெய் ஊற்றி, பின்னர் காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம், லேசாக வெந்த பின்னர், முட்டை கோஸை போட்டு வதக்கவும். பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு, தயிர், தேங்காய் பால் சேர்த்து வதக்கவும். 

பின்னர் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும், ஊறவைத்த அரிசியை கொட்டி கிளறவும். பின்னர் பாத்திரத்தை மூடி பாதி வெந்ததும் திறந்து கிளறி மீண்டும் மூடி வெந்ததும், இறக்கி சூடாக பரிமாறவும். 

சுவையான முட்டைகோஸ் பிரியாணி ரெடி!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare muttaikos briyani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->