சுவையான மீல்மேக்கர் பிரியாணி!! செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

மீல்மேக்கர் - 1 கப்,
பாஸ்மதி அரிசி - 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 1,
தக்காளி - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
பிரிஞ்சி இலை - சிறிது,
நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.
பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,

செய்முறை :

கொத்தமல்லி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
பிரியாணிக்கு வேண்டிய பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைக்கவும். 

நனறாக கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின்னர், தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை தூள் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர்,  கொத்தமல்லி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

பின்னர் தாக்க்களியை சேர்க்கவும். புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும். 

கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர் மற்றும் அரிசியையும் சேர்த்து கொதிக்க விட்டு குக்கரை மூடி ஒரு விசில் அடித்தவுடன் நிறுத்தி சிறிது நேரம் கழித்து திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare meelmaker briyani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->